இந்திய துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே அவர்களுக்கான பிரியாவிடை வரவேற்பு நிகழ்வில் M.A சுமந்திரன், சிறிதரன் , சாணக்கியன் பங்கேற்பு..!
இந்தியாவின் துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே அவர்களுக்கு ITC Ratnadipa ஹோட்டலின் Sangam Ballroom மண்டபத்தில் நடைபெற்ற பிரியாவிடை வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு, அவருடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன்போது தமிழரசின் பொது செயலாளர் M.A சுமந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இலங்கை – இந்திய உறவுகளை வலுப்படுத்துவதிலும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்புகளை நான் நன்றியுடன் நினைவுகூருகிறேன். அவரது பணிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒத்துழைப்புகளும் நல்லிணக்க முயற்சிகளும் இரு நாடுகளின் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
இந்த நிகழ்வில் அரசியல், தூதரக, வர்த்தக மற்றும் சமூகத் துறைகளைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. இது எதிர்காலத்தில் மேலும் பல ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய தளமாக அமைந்தது.
கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே அவர்களின் எதிர்காலப் பொறுப்புகளுக்கும் பணிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மேற்கொள்ளும் புதிய பயணமும் வெற்றிகரமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
5/30/2026 07:56:00 AM
Home
/
Unlabelled
/
இந்திய துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே அவர்களுக்கான பிரியாவிடை வரவேற்பு நிகழ்வில்M.A சுமந்திரன், சிறிதரன் , சாணக்கியன் பங்கேற்பு..!
இந்திய துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே அவர்களுக்கான பிரியாவிடை வரவேற்பு நிகழ்வில்M.A சுமந்திரன், சிறிதரன் , சாணக்கியன் பங்கேற்பு..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: