News Just In

5/09/2020 11:09:00 AM

ஆயுள் காப்புறுதி பயனாளர்கள் தவணைப் பணத்தைச் செலுத்த விடுவிப்புக் காலம்


ஆயுள் காப்புறுதி பயனாளர்கள் தங்கள் தவணைப் பணத்தைச் செலுத்த விடுவிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை காப்புறுதி ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தச் சலுகைக் காலம் குறித்து அனைத்துக் காப்புறுதி நிறுவனங்களின் முகாமைத்துவத்துக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை காப்புறுதி ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமயந்தி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
``
அதன்படி, மார்ச் 1ஆம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதிவரை எந்தவொரு காப்புறுதிப் பயனாளரும் தங்கள் தவணத்தைப் பணத்தைச் செலுத்த வேண்டியிருந்தால், இந்த சலுகை காலத்திற்கு தகுதியுடையவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: