News Just In

5/05/2025 10:23:00 AM

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!


கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!
 

இலங்கையின் முன்னணி தேசியப் பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.

கல்வி நிர்வாக சேவையின் இரண்டாவது அல்லது மூன்றாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

அதேநேரம் இம்முறை அதிபர்களாக நியமிக்கப்படும் நபர்கள் அந்தப் பதவியில் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வரை சேவையாற்ற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு நாடு தழுவிய ரீதியில் அதிபர் பதவி வெற்றிடமாகவுள்ள 24 தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் பதவிகளுக்கே இவ்வாறு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இவற்றில் காத்தான்குடி மத்திய கல்லூரி மற்றும் திருகோணமலை ஶ்ரீ சண்முகா தேசிய கல்லூரி ஆகிய இரண்டு தமிழ் மொழிப் பாடசாலைகளும் உள்ளடங்கியுள்ளன

No comments: