News Just In

5/05/2025 10:18:00 AM

அட்டாளைச்சேனை ஸஹ்றா வித்தியாலயத்திற்கு முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் ஸ்மார்ட் போர்டு கையளிப்பு !

அட்டாளைச்சேனை ஸஹ்றா வித்தியாலயத்திற்கு முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் ஸ்மார்ட் போர்டு கையளிப்பு !


நூருல் ஹுதா உமர்
அட்டாளைச்சேனை பிரதேச மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்ட பாடசாலைகளில் ஒன்றாக திகழும் அட்டாளைச்சேனை கமு/அக்/ஸஹ்றா வித்தியாலய மாணவர்களின் நலன்கருதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு தேவையான ஸ்மார்ட் போர்டு மற்றும் பாடசாலை கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தது.

அட்டாளைச்சேனை கமு/அக்/ஸஹ்றா வித்தியாலய அதிபர் ஏ.எல். அஜ்மல் தலைமையிலான பாடசாலை சமூகத்தை சந்தித்து பாடசாலை அபிவிருத்தி பணிகள், கல்வி மேம்பாட்டு விடயங்களை பற்றி கலந்துரையாடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் தனது நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு மற்றும் பாடசாலை கற்றல், கற்பித்தல் உபகரணங்களை பார்வையிட்டதுடன் அடுத்தகட்ட பணிகளுக்கு தேவையான ஒழுங்குகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
இதன்போது மாணவர்களின் விளையாட்டுத் துறை, கல்வி மற்றும் கல்விசாரா விடயங்களின் அடைவுகள் மேம்பாட்டு விடயங்கள் பற்றியும் ஆராய்ந்தார். இந்த விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் ஆலோசகர் எம்.ஜே.எம். அன்வர் நௌஸாத், வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள், பாடசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது இப்பாடசாலையின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களது பங்களிப்பு தொடர்பில் சிலாகித்த பாடசாலை அதிபர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கிய ஒத்துழைப்புக்கும், தொடர்ச்சியான சேவைகளுக்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்

No comments: