News Just In

5/05/2025 10:14:00 AM

இலங்கையில் தொடரும் துப்பாக்கி சூடு; இன்று அதிகாலை பறிபோன 19 வயது இளைஞனின் உயிர்!

இலங்கையில் தொடரும் துப்பாக்கி சூடு; இன்று அதிகாலை பறிபோன 19 வயது இளைஞனின் உயிர்




கல்கிஸை - கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (5) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் ​மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் உயிரிந்த இளைஞன் தெஹிவளை - ஓபன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை களுத்துறை, நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் ஒருவர் களுத்துறையில் உள்ள நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments: