வெளியான க.பொ.த உயர்தர (2024) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலய கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் அருட். சகோ. ச. இ. ரெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையில் (30) காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களை மாணவத்தலைவர்கள் மாலை அணிவித்து வரவேற்றதுடன் அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததோடு மாணவர்கள் அவர்களின் அனுபவப் பகிர்வினை கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.
குறித்த மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக நின்று உழைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு ஆசிரியர்களோடு இணைந்து செயற்பட்ட பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதோடு இரவு பகல் பாராது அனைவரையும் வழி நடத்திய எமது அதிபருக்கும் விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ் வெற்றிக்கு பக்கபலமாக நின்ற பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சிய, அவுஸ்திரேலிய கிளைகளுக்கும், எமது பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், Jubilee குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு இவ் பெறுபேற்றை பெற்று தந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது
No comments: