6ஆம் திகதி இலங்கையர்களுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் 6ஆம் திகதிக்கான விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் மேலும் பல்கலைக்கழகங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
மேலும், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் குறித்த தினத்தில் விடுமுறை வழங்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
5/04/2025 09:57:00 AM
6ஆம் திகதி இலங்கையர்களுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: