News Just In

5/09/2020 10:45:00 AM

மருதமுனை கரைவலை மீனவர்கள் மீன்பிடியில் எதிர்நோக்கும் தடைகளை அகற்ற நடவடிக்கை

(அபு ஹின்ஸா)
மருதமுனை கரைவலை மீனவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கரைவலை மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்தும் கடலில் காணப்படும் தடைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் உதவியுடன் ஆழ்கடல் சுழியோடிகளினால் எடுக்கப்பட்டுள்ளது.

கடலில் காணப்படும் தடைகள் மூலம் வலைகள் சேதமாகி பல மணிநேரங்களாக கஷ்டப்பட்டு பிடிக்கும் மீன்கள் தப்பி சென்றுவிடுவதால் எங்களின் மீன்பிடி தொழிலில் பாரிய நஷ்டம் ஏற்படுகிறது. இக்கட்டான சூழ்நிலையில் எங்களுக்கு கிடைக்கும் சிறிய வருமானமும் இதனால் இழக்கப்படுகிறது. கடலின் கரைக்கு சற்று தொலைவில் உள்ள கொங்கிரீட் எச்சங்கள், பாரிய கற்கள், மரங்கள் போன்றவற்றால் வலைக்கு தினமும் சேதம் ஏற்படுகிறது என மருதமுனை கரைவலை மீனவர்கள் முன்வைத்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

No comments: