News Just In

5/08/2025 05:46:00 AM

சொந்த ஊரில் மண்ணை கவ்விய சுமந்திரன்!

சொந்த ஊரில் மண்ணை கவ்விய சுமந்திரன்



நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணி குடத்தனை வட்டாரத்தில் சுமந்திரன் தோல்வியை தழுவியதாக கூறப்படுகின்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரனின் பூர்வீக இடமான குடத்தனையில் சுமந்திரன் படு தோல்வியடைந்துள்ளார்.

அதேவேளை குடத்தனையில் சங்கு கட்சியில் போட்டியிட்ட முன்னாள் போராளி வெற்றி பெற்றுள்ளார். வெற்றிபெற்ற முன்னாள் போராளி தமிழரசு கட்சியின் உறுப்பினராவார்.

முன்னாள் போராளி தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட கேட்டு வந்தபோது சுமந்திரனால் அவர் நிராகரிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சுமந்திரனால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் போராளி சங்கு சின்னத்தில் போட்டியிட்டு சுமந்திரனின் பூர்வீகமான குடத்தனையில் வெற்றிபெற்றுள்ளதுடன், தனது சொந்த ஊரில் சுமந்திரன் படு தோல்வியை சந்தித்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் போராளி வெற்றிபெற்றமை தொடர்பில் ஊடகங்கள் மத்தியில் சுமந்திரன் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது

No comments: