News Just In

5/08/2025 05:50:00 AM

உலக மக்கள் எதிர்பார்த்துள்ள புதிய பாப்பரசர் யார்? உறுதிமொழி எடுத்த கார்டினல் மால்கம் ரஞ்சித்!

உலக மக்கள் எதிர்பார்த்துள்ள புதிய பாப்பரசர் யார்? உறுதிமொழி எடுத்த கார்டினல் மால்கம் ரஞ்சித்




புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இறுதி நேர நிகழ்வு வத்திக்கானில் தற்போது நடைபெறுகிறது.

வத்திக்கானிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் புதிய பாப்பரசர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.

உலகளாவிய ரீதியில் 252 கத்தோலிக்க கர்தினால்களில் 133 பேர் கூடி புதிய பாப்பரசரை தெரிவு செய்யவுள்ளனர்.

இதில் ரகசிய உறுதிமொழி எடுத்தவர்களில் கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்தும் ஒருவர் ஆவார்.

 நடைபெறும் வாக்கெடுப்பில் கர்தினால் ஒருவர் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றால் அவர் அடுத்த பாப்பரசராக அறிவிக்கப்படுவார்.



புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டால் வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வௌ்ளை புகையும் தெரிவு செய்யப்படவில்லை எனில் கறுப்பு புகையும் வௌியேறும்.

இந்த நிகழ்வை உலக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்

No comments: