விமான பயணிகளை தவிர்ந்த ஏனைய நபர்களுக்கு விமான நிலையத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் இவ்வாறு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இதுவரையில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது.
இந்நிலையில், கொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது நேற்று கண்டறியப்பட்டது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் ஒரு சீன பெண்ணுக்கே இந்த வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
43 வயதான குறித்த பெண் சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறான நிலையிலேயே விமான பயணிகளை தவிர்ந்த ஏனைய நபர்களுக்கு விமான நிலையத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments: