(யனோபன்)
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு இன்று காலை விஜயம் செய்து இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.
பின்னர் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கு சென்ற ஆளுநர் மற்றும் ஆளுநரின் குழுவினர் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்சணாகெளரி தினேஸ் அவர்களால் வரவேற்கப்பட்டு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது பெண்களின் வாழ்வியல் தேவைகளை கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களது வாழ்வாதார மேம்பட்டிற்கும் தொழில் முயற்சிக்குமான பல திட்டங்களை இப் பிராந்தியத்தில் ஆரம்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் ஆளுநரின் பிரத்தியேக செயலாளர்கள், கிழக்கு மாகாண சுற்றுலா சபை பணியகத்தின் தவிசாளர், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போக்குவரத்து முகாமையாளரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித்தலைவருமான ஹரிபிரதாப், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர், மண்முனை தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
1/30/2020 08:41:00 PM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
கிழக்கு மாகாண ஆளுநர் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு விஜயம்
கிழக்கு மாகாண ஆளுநர் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு விஜயம்
Subscribe to:
Post Comments (Atom)
























No comments: