News Just In

1/30/2020 06:21:00 PM

செங்கலடியில் உதயசூரியன் உதவிக்குழுவின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள்


செங்கலடியில் உதய சூரியன் உதவிக்குழுவின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள்.

செங்கலடியில் உதய சூரியன் உதவிக்குழுவின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் இடம்பெற்றது.

இன்று காலை எல்லை நகர்இ ஏறாவூர்-04 மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதிகளில் பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் உதய சூரியன் உதவிக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள இடங்கள் அவதானிக்கப்பட்டு துப்பரவு செய்யப்பட்டது. 

ஏறாவூர் நகரசபையின் ஒத்துளைப்புடன் இச் சிரமதானப்பணி இடம்பெற்றதுடன் விசேடமாக செங்கலடி பிராந்திய பொது சுகாதார அதிகாரிகளும் இச் செயற்பாட்டிற்கு தங்களது பங்களிப்பை ஆற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








No comments: