News Just In

1/27/2020 08:14:00 PM

ஊறணி சரஸ்வதி வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி


மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் இன்று(27) பாடசாலை மைதானத்தில் அதிபர் யோகானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக மட்டக்களப்பு  மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் அவர்களும், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி ரி.உதயாகரன், மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், விசேட அதிதிகளாக உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

வாத்தியங்கள் இசைக்க அதிதிகள் வரவேற்பு, கொடியேற்றுதல், அணிநடை, மைதான விளையாட்டுக்கள், உடற்பயிற்சி கண்காட்சி, அதிதிகள் உரை, பரிசுகள் வழங்குதல் போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

இல்லங்களின் தர வரிசையில் யமுனை இல்லம் மூன்றாவது இடத்தினையும், கங்கை இல்லம் இரண்டாவது இடத்தினையும், காவேரி இல்லம் முதல் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.


 



































No comments: