News Just In

1/27/2020 08:31:00 PM

மட்டக்களப்பு நகர புராதன பள்ளிவாசலுக்கு புதிய அரசாங்க அதிபர் விஜயம்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
திங்கட்கிழமை 27.01.2020  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக கடமையினை பொறுப்பேற்ற அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு நகர புராதன பள்ளிவாசலான  ஜாமி உஸ் ஸலாம் ஜும்மா  மஸ்ஜித்திற்குச் சென்று அங்கு நிருவாகத்தினரைச் சந்தித்ததோடு துஆப் பிரார்த்தனையிலும் உடனிருந்தார்.

அங்கு பள்ளிவாசல் நிருவாகிகள் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அரசாங்க அதிபர் கலாமதி, பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கு தனது நன்றியறிதலைத் தெரிவித்ததுடன் நீண்ட வரலாறு கொண்ட பள்ளிவாயலுக்கு தான் வந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டம் பல்லின சமூகம் வாழ்கின்ற ஒரு மாவட்டமாக திகழ்ந்து வருவதும் அவர்களிடையே ஒற்றுமையினையும் நல்லுறவையும் இறுக்கமாக பேணுவதற்கு தன்னலான முழு முயற்சியினையும் வழங்குவதாக இனங்களுக்கிடையில் கருத்து  வேறுபாடுகள், கசப்புணர்வுகள், ஏற்படாத வகையில் தனது பணியினை பாகுபாடின்றி சகலருக்கும் ஒரே விதமாக ஆற்றுவதில் பின்நிற்க மாட்டேன் உறுதியளித்தார்.

மேலும் தன்னுடைய நிர்வாக சேவை இறுதிக் காலத்தில் தான் பிறந்த மண்ணான மட்டக்களப்பிற்கு ஆற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக தனது முழுமையான அர்ப்பணிப்புடன் அந்த மக்களுக்கு முடியுமான உதவிகளை சமூக பாரபட்சமின்றி செய்வதில் முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.








No comments: