News Just In

1/30/2020 01:57:00 PM

நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மஹிந்த முக்கிய அறிவிப்பு


கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனவே, மக்கள் இதுதொடர்பாக அச்சமடையத் தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்தக் காலத்தில பல பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்காவுக்கு இலவசமாக அழைத்துச் செல்வதாக கூறப்பட்டிருந்தது.

இதனால், தம்மதிவ புனித பூமிக்கு இலவசமாக அழைத்துச் செல்ல மாட்டார்களா என என்னிடம் பலரும் கேட்டுகிறார்கள். அதேநேரம், கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் இன்று மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் என்ற வகையில், நாம் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம். இருப்பினும், மக்கள் இன்று அச்சத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். வெளியிடங்களுக்கு செல்லவே பயப்படுகிறார்கள்.

பேருந்தில் செல்லவும் அஞ்சுகிறார்கள். ஆனால், இதுதொடர்பாக மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று நாம் இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments: