கல்லடி உப்போடை நொச்சிமுனை ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகத்தின் குட முழுக்கு மிகவும் சிறப்பாகவும் மங்களகரமாக ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரகரோகரா கோஷங்களுடன் இன்று(30) இனிதே நடந்தேறியது.
நூற்றாண்டு கால வரலாற்று பழமை கொண்ட சிறப்புமிக்க ஆலயமான ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், பல ஆண்டுகாலமாக குடமுழுக்கு நடைபெறாது இருந்தது, தற்போது மக்களின் ஒத்துழைப்புடன் நிருவாகத்தினரின் முயற்சியின் வாயிலாக குடமுழுக்கு கண்டு புது தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து வெள்ளை இனத்தவர் கூட தரிசிக்கும் பதியாக பெருமை பெற்றுள்ள ஆலயத்தின் குடமுழுக்கு கிரிகைகளில் பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருள்பெற்றனர்.
குடமுழுக்கு நிகழ்வின் போது கருடன் வானில் சுற்றி ஆலயத்தை வலம் வந்து வணங்கிய காட்சி அடியவர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. பொதுவாக இவ்வாறன குடமுழுக்கு நிகழ்வில் கருடனின் காட்சி இடம்பெறும் என்பது இந்துக்களின் ஐதீகம் ஆகும்.

























No comments: