News Just In

12/01/2019 12:43:00 PM

வடக்கு ஆளுநராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசரை நியமிக்க முயற்சி


வடக்கு மாகாண ஆளுநராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவன் உள்ளிட்ட மூவரின் பெயர்கள் வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கான பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனே முதன்மை இடத்தில் உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிக்கின்றன.

No comments: