News Just In

12/01/2019 01:11:00 PM

சீரற்ற காலநிலை-சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்


சீரற்ற காலநிலை காரணமாக பதுளை - பஸ்ஸறை - நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேசத்தில் கல்விப் பொதுத் தராதர பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்குச் சென்று பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான ஆலோசனைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைக்கு 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: