News Just In

12/01/2019 10:28:00 AM

சீரற்ற காலநிலை - 643 குடும்பங்கள் பாதிப்பு


தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரையில் 643 குடும்பங் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக பல நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இராஜாங்கனை, உடவளவ, அங்கமுவ மற்றும் தெதுறு ஓயா உள்ளிட்ட பல நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

No comments: