News Just In

12/01/2019 10:33:00 AM

3 மாவட்டங்களில் மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை


தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண் சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

மண் மேடு இடிந்து விழுந்தமையால் பதுளை மாவட்டத்தில் சில வீதிகளில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் சில இடங்களில் மண் சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: