News Just In

11/24/2019 07:30:00 AM

இஸ்ரோவினால் ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ள செயற்கைக்கோள்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி.சி-47 (PSLVC-47) ராக்கெட் மூலம் இந்தியாவின் கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோளும் அதனுடன் சேர்த்து அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களும் நவம்பர் 25ஆம் திகதி காலை 9.28 மணியளவில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.

இந் நிலையில் பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் திகதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 25ஆம் திகதி க்கு பதிலாக 27ஆம் திகதி ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது.

பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் எக்ஸ்.எல். வகையில் 21-வது ராக்கெட் ஆகும். சதீஷ்சவான் விண்வெளி மையத்தில் ஏவப்படும் 75-வது ராக்கெட் என்ற பெருமையை பெறுகிறது.

509 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்ட பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட உள்ள கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் துல்லியமாக படம் பிடித்து அனுப்பும் திறன் கொண்டது.

மேலும், எதிரிகளின் ராணுவ நிலைகளையும், பதுங்கு குழிகளையும், தீவிரவாதிகளின் மறைவிடங்களையும் மிக துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது.

No comments: