News Just In

11/24/2019 08:00:00 AM

விரைவாக 5000 ஓட்டங்களை குவித்த வீரர் பட்டியலில் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி ஒரு அணி தலைவராக இருந்து வேகமாக 5,000 டெஸ்ட் ரன்களை எடுத்த வீரர் எனும் பெருமையினை பெற்றார்.

86 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை கோலி எட்டியுள்ளார். இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இச்சாதனையினை புரிய 97 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார்.

டெல்லி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்று வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் போது கோலி தனது 32-வது ரன் எடுத்தபோது இந்த சாதனையினை புரிந்துள்ளார்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  பங்களாதேஷ் அணி 106 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 

இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா முறையே 14 மற்றும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கோலி மற்றும் சடேஷ்வர் புஜாரா இந்தியாவை முன்னிலை பெற செய்தனர். 

No comments: