வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றிவரும் வைத்தியர்கள் இருவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோய் வேகமாக வவுனியாவில் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதார திணைக்களம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் 305 பேர் டெங்கு நோய் தாக்கம் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில் குறித்த வைத்தியசாலையில் பணியாற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த இரு வைத்தியர்களும் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்னர்.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலை சூழல் மற்றும் வைத்தியர் விடுதி ஆகிய பகுதிகளில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த சுகாதார திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
11/24/2019 08:17:00 AM
வைத்தியசாலையில் பணியாற்றிவந்த வைத்தியர்கள் இருவருக்கு டெங்கு!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: