01. தடுக்கப்பட்டமைக்கான அறிவித்தல் (Blocked Notification)
நீங்கள் ஒரு இலக்கத்தை தடுக்கும் பட்சத்தில், அது தொடர்பான அறிவித்தல் குறிப்பிட்ட இலக்கத்தின் உரையாடல் பகுதியில் அறிவிக்கும் அம்சம் தான் இந்த தடுக்கப்பட்டமைக்கான அறிவித்தல். அதாவது நீங்கள் தடுக்கும் இலக்கத்திற்கு செய்தி அனுப்ப விழையும் போது “நீங்கள் இந்த தொடர்பை தடுத்து வைத்துள்ளீர்கள். தொடர்ந்து செய்தி அனுப்ப தடுக்கப்பட்ட இலக்கத்தை நீக்கி விடவும்" என்ற அறிவித்தல் படிக்க கிடைக்கும். எவ்வாறாயினும், இந்த அறிவிப்பு உங்களுக்கு மட்டுமே தெரியும். உங்களால் தடுக்கப்பட்ட நபருக்கு அல்ல.
02. பேஸ்புக் பே (Facebook Pay)
வட்ஸ்அப் பேஸ்புக் பேவை செயல்படுத்தி வருகிறது. இது முதலில் Android ஆப்பில் கண்டுபிடிக்கப்பட்டது, சமீபத்தில் iOS பயன்பாட்டிலும் தோன்றியுள்ளது. இது அறிமுகமான பின்னர் வட்ஸ்அப் பயனர்களால் தங்களது வட்ஸ்அப் பயன்பாட்டிற்குள்ளேயே பேஸ்புக் பேவை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது வாட்ஸ்அப் வழியாக மட்டுமின்றி மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் வழியிலான பண பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கிறது.
03. பதிவுசெய்ததற்கான அறிவித்தல் (Registration Notification)
வட்ஸ்அப் விரைவில் மல்டி பிளாட்பார்ம் ஆதரவில் செயல்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட போன்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தும் அம்சம் ஆகும். இந்த அம்சத்தை நடைமுறைப்படுத்த வட்ஸ்அப் நிறுவனமானது பதிவுசெய்ததற்கான அறிவித்தல்களை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பயனர்கள் தங்கள் வட்ஸ்அப் கணக்கை வேறொரு போனில் பதிவு செய்ய முயற்சித்தால் அவர்களுக்கு கடவு இலக்கம் குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
04. பேஸ்புக் பிராண்டிங் (Facebook Branding)
வாட்ஸ்அப் சமீபத்தில் தனது மெசேஜிங் அப்பில் பேஸ்புக் பிராண்டிங்கை ஒருங்கிணைத்தது என்பதை நாம் அறிவோம். தற்போது அந்த பேஸ்புக் பிராண்டிங்கில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போது பேஸ்புக் எனும் எழுத்துக்கள் ஆனது கேப்பிட்டல் லெட்டரில் காட்டப்பட்டுள்ளது, அதாவது பயனர்களின் கண்களில் அடிக்கடி படும்படி பெரிதாக உள்ளது.

No comments: