இது தொடர்பாக துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பதற்கும் அத்தொழில்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இறால் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அந்தப் பணிகளை மேலும் திறம்பட முன்னெடுப்பது தொடர்பாகவும் துறைசார் நிபுணர்களுடன் அமைச்சர் விரிவாக கலந்துரையாடினார்.

No comments: