Update
மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் இன்று (26) மதியம் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடம் என தெரிவிக்கப்படுகின்றது.
கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் ICBT கட்டிடத்திற்கு முன்னால் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு மோட்டார் சைக்கிளில் முதியவர் ஒருவரும், அடுத்த மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்களும் பயணித்துள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட விபத்தில் முதியவர் பலத்த காயத்திற்கு உட்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயப்பட்டவர்களை உடனடி அம்புலன்ஸ் சேவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments: