News Just In

11/28/2019 01:29:00 PM

வெள்ள நீரினை வெளியேற்றும் பணிகளில் மட்டு மாநகரசபையின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ் நிலப் பிரதேசங்கள் பல நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கிவருகின்றனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதி நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக அப்பகுதியில் பல குடும்பங்கள் இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரினை வெளியேற்றம் பணிகளை கடந்த இரண்டு நாட்களாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களின் மேற்பார்வையில் மாநகரசபை அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: