தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
குறித்த முன்மொழிவில் ஒரு அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் 25 இலட்சம் ரூபாவையும், சுயாதீன குழுக்கள் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் 30 இலட்சம் ரூபாவினையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.
ஆனால் தற்போதைய தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் ஒரு அரசியல் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 50 ஆயிரம் ரூபாவையும், ஒரு சுயாதீன வேட்பாளர் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாக இதுவரை செலுத்தியிருந்த நிலையிலேயே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் இதுபோன்ற சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி மாகாண சபை தேர்தலில் ஒரு அரசியல் கட்சியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர் 7,500 ரூபாவையும் ஒரு சுயாதீன வேட்பாளர் 5,000 ஆயிரம் ரூபாவையும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

No comments: