News Just In

11/28/2019 02:09:00 PM

அரச நிறுவனங்களுக்கு பொருத்தமானவர்களை நியமிக்க 06பேர் கொண்ட குழு நியமனம்!

அரச நிறுவனங்களுக்கு திறமையும் தகுதியும் கொண்டவர்களை நியமிக்க தேவையான பரிந்துரைகளை முன்வைக்க ஜனாதிபதி செயலகத்தின் 6 பணியாளர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரவை செயலாளரான சுமித் அபேசிங்க தலைமை தாங்கும் இந்த குழுவில் சுசந்த ரத்நாயக்க, கலாநிதி நாலக கொடஹேவா, டயஸ் கோமஸ், கலாநிதி சுசந்த குணசேன மற்றும் பேராசிரியர் ஜகத் வெல்லவத்த ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

No comments: