News Just In

11/21/2019 09:57:00 AM

களுவாஞ்சிகுடி சூரையடி கிராம மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான கருத்தரங்கு

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) 
மட்டக்களப்பில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் விழிப்புணர்வுக் கருத்தரங்கு இடம்பெற்றுள்ளதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணி  உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில் புதன்கிழமை 20.11.2019 நடைபெற்றது.

இதில் களுவாஞ்சிகுடி - சூரையடி கிராமத்தில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியில் குடியிருக்கும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் காணி உரிமையாளர்களின் நியதிச் சட்டதிட்டங்கள், கடமைகள், பொறுப்புக்கள் பற்றியும் மக்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கான தீர்வுகள் பற்றியும் விரிவான விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும் விசேட ஏற்பாடு சட்டத்தின் முலம் காணி உச்ச வரம்பு சட்டத்திற்கமைய காணிகளை தம்வசம் வைத்திருப்பவர்களிடமிருந்து காணிகளைப்பெற்று காணியற்ற மக்களிற்கு பகிர்ந்தளிக்கும் செயற்பாடு குறித்தும் விளக்கமிளிக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் நேசகுமாரன் விமல்ராஜ் உட்பட அவ் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களும் கலந்துக்கொண்டனர்.








No comments: