5ஆவது ரோல் போல் (Roll Ball) உலகக் கிண்ண ஆண்களுக்கான தனது கடைசி லீக் போட்டியில் பிரான்ஸ் அணியை நேற்று வெற்றிகொண்ட இலங்கை அணி கால் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
பங்களாதேஷில் 2017இல் நடைபெற்ற 4ஆவது ரோல் போல் உலகக் கிண்ணப் போட்டியில் 10 ஆவது இடத்தை பெற்ற இலங்கை அணி இம்முறை கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.
D குழுவுக்கான போட்டியில் வெற்றியீட்டினால் மாத்திரமே கால் இறுதிக்கு முன்னேறமுடியும் என்ற நிலையில் பிரான்ஸை எதிர்கொண்ட இலங்கை 7–0 என்ற கோல்கள் கணக்கில் மிக இலகுவாக வெற்றிகொண்டு கால் இறுதிக்கு முன்னேறியது.
பங்களாதேஷுக்கு எதிராக நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற போட்டியில் 0–2 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை தோல்வியைத் தழுவியிருந்தது.
D குழுவுக்கான லீக் சுற்றில் 4 போட்டிகளில் இரண்டு வெற்றிகள், ஒரு தோல்வி, ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவுகளுடன் இரண்டாவது இடத்தை இலங்கை பெற்றது. பங்களாதேஷ் முதலாம் இடத்தைப் பெற்றது.
இந்தியாவின் சென்னையிலுள்ள ஐ.சி.எப். உள்ளக விளையாட்டரங்கில் குறித்த போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. இன்று நடைபெறவுள்ள கால் இறுதியில் ஆர்ஜன்டீனாவை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.
11/21/2019 07:00:00 AM
ரோல் போல் உலகக் கிண்ணப் போட்டியின் கால் இறுதியில் இலங்கை அணி
Subscribe to:
Post Comments (Atom)


No comments: