பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு அமைய அரச தலைவராக நியமிக்கப்பட்டவர் தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவது வழமையாகும். இதன்படி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட புதிய ஜனாதிபதி தனது வருகை தொடர்பில் விசேட விருந்தினர் பதிவேட்டில் குறிப்பொன்றை எழுதினார்.
இதன் பின்னர் மல்வத்து மகா விகாரையில் மல்வத்து மகாநாயக்க தேரர் உள்ளிட்ட தேரர்களிடம் ஜனாதிபதி ஆசிபெற்றார். இதன்போது மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைத்தனர்.






No comments: