
மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட நாவற்குடா திருமகள் மேற்கு வீதியினைப் புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று தற்போது கொங்கிறிட் வீதியாக அமைக்கப்பட்டுள்ளது.
மாநகர சபைக்கு மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் ஓர் அம்சமாக 14ம் வட்டாரத்திற்குட்பட்ட நாவற்குடா திருமகள் மேற்கு வீதியானது கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இடம்பெற்று தற்போது முழுமை அடைந்துள்ளது.
2.5 மில்லியன் ரூபாய் செலவில் கிட்டத்தட்ட 268 மீற்றர் நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மழை காலங்களில் வெள்ள நீர் தேங்கி அன்றாட போக்குவரத்து செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்தாகவும், தற்போது இவ் வீதியை புனரமைத்து தந்த மாநகர முதல்வருக்கும் குறித்த வட்டார உறுப்பினருக்கும் குறித்த வட்டார பொது மக்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.








No comments: