இரண்டு அம்பியூலன்ஸ் வண்டிகள் மொனராகலை - புத்தள பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதுண்டு வெள்ளிக்கிழமை (22.11.2019) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளன.
படல்கும்புர மாவட்ட மருத்துவமனைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டியும் 1990 சேவை சுவ செரிய அம்பியூலன்ஸ் வண்டியுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ் விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்ததுள்ளன.
குறித்த வண்டிகளில் இருந்த நோயாளர்கள் இருவரையும் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச மக்கள் மேற்கொண்டனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
11/23/2019 11:15:00 AM
அம்பியூலன்ஸ் வண்டிகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: