News Just In

11/21/2019 09:19:00 PM

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தகவல் வெளியிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற முன்னேற்றம் தொடர்பில் பாராட்டியதுடன் பாகிஸ்தான்-இலங்கை இருதரப்பு உறவை அனைத்து பரிமாணங்களிலும் மேலும் வலுப்படுத்த இலங்கை பிரதமருடன் நெருக்கமாக பணியாற்ற விரும்புவதாக பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

இலங்கை பிரதமர் பிரதமர் இம்ரான் கான் அவர்களின் வாழ்த்துக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நன்றி தெரிவித்ததோடு, இலங்கை-பாகிஸ்தான் உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து செயற்படுவதை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இதன்போது புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையும் பாகிஸ்தானுக்கு வருமாறும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: