அமைச்சர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் பின்னர் மல்வத்து மகா விஹாரைக்கு பிரதமர் சென்றார். அங்கு மஹாநாயக்கர் சங்கைக்குரிய திம்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து நல்லாசி பெற்றுக் கொண்டார். நாட்டின் அனைத்து மக்களுக்கும் சேவையாற்றுமாறு தேரர் இதன்போது பிரதமரிடம் தெரிவித்தார்.
பிரதமர் மல்வத்துபீடத்தின் துணைத் தேரர் சங்கைக்குரிய திவுல் கும்புறே விமலதம்ம தேரரையும் சந்தித்தார். சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரரையும் சந்தித்து நல்லாசிகளைப் பிரதமர் பெற்றுக் கொண்டார். அஸ்கிரி விஹாரைக்குச் சென்ற பிரதமர் சங்கைக்குரிய ஆனமடுவே தம்மதஷி தேரரையும் சந்தித்தார். ஜனாதிபதி, பிரதமர் ஆகிய சகோதரர்கள் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை ஆற்ற முடியும் என்று தேரர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.




No comments: