News Just In

11/28/2019 03:28:00 PM

சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய துறையின் புதிய செயலாளராக பி.எஸ்.எம்.சாள்ஸ்

சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய துறையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் இன்று (28.11.2019) தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

சுவசெரியபாய என்ற சுகாதார அமைச்சின் கட்டிடத்தின் செயலாளர் இன்று தனது கடமைகளை ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து அங்கு உள்ள ஊழியர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். புதிய செயலாளர் என்ற ரிதியில் அன்புடன் என்னை வரவேற்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமை குறித்து உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதற்கு முன்னர் நான் வைத்தியசாலை அதிகாரிகளுடன் பணியாற்றியுள்ளேன். அவர்களுடன் பல வேலைத்திட்டங்களில் பங்கு கொண்டுள்ளேன். இருப்பினும் சுகாதார துறைக்கு நான் புதிது. இந்த துறையில் பல்வேறுபட்ட தொழில்துறையினரும் தொழில்நுட்ப பிரிவுகளும் உள்ளன. இதன் காரணமாக சுகாதார அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில் செயற்படுவதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கின்றேன். நாம் அனைவரும் அரசாங்க ஊழியர்கள். எமது கடமை பொது மக்களுக்கு சேவையாற்றுவதும் அவர்களை பாதுகாப்பதுமே என்றும் அவர் தெரிவித்தார்.

நான் சுங்க திணைக்களத்திற்கு கடமைக்காக சென்ற பொழுது அந்த துறை எனக்கு புதியதொன்றாகும். இருப்பினும் அங்கிருந்த அதிகாரிகள் நான் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு திர்வை காண்பதற்காக எனக்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பை வழங்கினார்கள். சுங்க திணைக்களம்; தொழில்நுட்பம் மற்றும் நாளாந்தம் உடனடியாக பணியாற்ற வேண்டிய நிறுவனமாகும். அதன் பணிகளை நான் வெற்றிகரமாக நிறைவு செய்தேன். சுங்க அதிகாரிகள் என்னை பாராட்டினார்கள். இருப்பினும் நான் அவர்களிடம் இருந்தே விடயங்களை கற்றுக்கொண்டேன்.

அதேபோன்று உங்களிடமும் எதிர்பார்க்கின்றேன். நான் அமைச்சில் அரச கொள்கைகளை நாட்டில் நிலவும் சட்ட விதிகளுக்கு அமைய பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன். நான் உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பை இதற்காக எதிர்பார்க்கின்றேன். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று கருதுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இந்த நிகழ்வில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அணில் யாசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments: