போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பான ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகத்தின் பணிப்பாளர் மிவா பன்ஹோஸர் கேற்றோ மற்றும் அந்த அமைப்பின் சர்வதேச கடல் குற்றத் தடுப்பு வேலைத்திட்டத்தின் தலைமை அதிகாரி எலென் கோலே உள்ளிட்ட குழுவினர் நீதி மனித உரிமை மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வாவை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு நீதி மனித உரிமைகள் மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இலங்கை சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பாவனை மற்றும் சிறைச்சாலைகளில் இருந்து போதைப்பொருள் விற்பனையை முன்னெடுப்பது தொடர்பான விடயங்கள் குறித்தும் இந்த நிலையை இல்லாதொழிப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சர்வதேச தரத்திலான அறிவு மற்றும் நடைமுறை மூலோபாயங்களை எவ்வாறு கடைப்பிடிப்பது குறித்தும் விரிவான முறையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த முறையின் மூலம் இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள இவ்வாறான நிலையை சரி செய்து போதைப் பொருட்கள் அற்ற சிறைச்சாலை சுற்றாடலை தயார் செய்வதற்கு தேவையான தொழில் நுட்பம் மற்றும் ஏனைய ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
11/28/2019 03:45:00 PM
போதைப்பொருளற்ற சிறைச்சாலை சுற்றாடலை ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை
Subscribe to:
Post Comments (Atom)

No comments: