திருகோணமலை சல்லி-சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான டி. அகிலராஜ் (29 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாம்பல்தீவு பகுதியில் இருந்து நேற்றிரவு மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்று இன்று காலை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கடல் கொந்தளிப்பு அதிகளவில் காணப்பட்டதால் படகு கவிழ்ந்ததையடுத்து மற்றைய படகுக்கு பாய்ந்துள்ளார்.
இதன்போது கீழே விழுந்ததில் படகில் பொருத்தப்பட்டிருந்த இன்ஜின் வெட்டியதால் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: