News Just In

11/18/2019 06:10:00 PM

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் சேர்ந்து பணியாற்ற அமெரிக்கா விருப்பம்-ஐக்கிய அமெரிக்க தூதரகம் அறிக்கை

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
ஆசியாவின் பழமையான ஜனநாயக நாட்டின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு தமது நாடு விரும்புவதாக கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் திங்கட்கிழமை 18.11.2019 வெளியட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை மக்களை அமெரிக்கா வாழ்த்துவதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் பணியாற்றுவதற்கு எதிர்பார்க்கிறது.

ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு என்பதற்கு பொருத்தமான வகையில் சுதந்திரமானதும் நீதியானதும் மற்றும்  வெளிப்படையானதுமான ஜனாதிபதித் தேர்தலொன்றின் மூலம் இலங்கை அதனது குடியரசின் வலிமை மற்றும் மீள் எழுச்சியைத் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகிறது. அமைதியான தேர்தலொன்றை ஊக்குவித்தமைக்காக தேர்தல்கள் ஆணைக்குழு, சிவில் சமூகம் மற்றும் அரச அதிகாரிகளை நாம் பாராட்டுகிறோம்.

உயரிய நல்லாட்சி, விரிவாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகள் முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கம் ஊடாக நாட்டின் இறையாண்மைக்கு ஒத்துழைப்பளிப்பதிலும் அனைத்து நாடுகளும் செழிப்படையக்கூடிய இந்து - பசுபிக் பிராந்தியமொன்றைப் பேணிப் பாதுகாப்பதிலும் புதிய ஜனாதிபதியுடனும் அனைத்து இலங்கை மக்களுடனும் எமது பணியைத் தொடர்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: