News Just In

11/18/2019 07:25:00 PM

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் மீது தாக்குதல் முயற்சிச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் கல்முனை பொலீஸில் முறைப்பாட்டையும் செய்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் தெரிவித்தவை

நேற்று மாலை 6 மணியளவில் தனது தொழில் கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பினேன். நான் வீடு திரும்பியதும் எனது மனைவி வீட்டு படலையைப் பூட்டியுள்ளார்.எனது வீட்டுக்கு வாகனம் ஒன்றிலும் டிப்பர் ஒன்றிலும் 20 வரையிலான மோட்டார் சைக்கிள்களிலும் வந்த கும்பலொன்று டேய் ராஜன் வீட்டுக்கு வெளியே வாடா என்று கத்தி சத்தமிட்டது. நான் வீட்டைத் திறக்கவில்லை.

எனது சகோதரியின் வீடு அருகில் உள்ளது. நான் பின்பக்கத்தால் எனது சகோதரியின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து வந்தவர்கள் யார் என்பதை அவதானித்தேன். அவர்கள் வீட்டு வாசலில் நின்று சஜித்திடம் காசு வாங்கிவிட்டா அவருக்கு வேலை செய்தாய். இனி நாங்கள் வந்துவிட்டம். உன்னை கவனிப்பம் என்று கூச்சலிட்டனர். எனக் கூறினார்.



No comments: