News Just In

11/29/2019 01:10:00 PM

நாவற்குடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று பார்வையிட்ட மாநகர முதல்வர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ் நிலப்பிரதேசங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக அப்பகுதிகளில் வசித்து வரும் பல குடும்பங்கள் இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை நாவற்குடா கிழக்கு பூநொச்சிமுனை கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீதிகள் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளிலும், மெதடிஸ்த சமாதான பாலர் பாடசாலையிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவ் வெள்ளம் காரணமாக 25 குடும்பங்களை சேர்ந்த 86 பேர் பாதிக்கப்பட்டு இவ்வாறு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் நேரில்சென்று பார்வையிட்டதோடு ஆரம்ப கட்ட தேவைகளை ஒழுங்கு செய்து கொடுத்துள்ளதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் உத்தியோகத்தர்களும், குறித்த பகுதிகளுக்கான கிராம சேவகர்களும் உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றனர்.









No comments: