News Just In

10/20/2019 07:32:00 PM

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தை மதுபோதையில் செலுத்திய சாரதி கைது

இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தை மதுபானம் அருந்திய நிலையில் செலுத்திய சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை (19) இரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தின் சாரதி மதுபானம் அருந்திய நிலையில் அதிக வேகத்துடன் பேருந்தை செலுத்துவதாக தகவல் கிடைத்தது.

கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பேருந்தை சாலியவௌ 18ஆம் கட்டை பகுதியில் வைத்து இடைமறித்த காவல்துறையினர் சாரதியை சோதனைக்கு உட்படுத்தி அவரைக் கைதுசெய்யதுள்ளனர்.

குறித்த சாரதி கொழும்பில் மதுபானத்தை அருந்திய பின்னர் இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தை செலுத்தியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

No comments: