News Just In

7/20/2022 10:41:00 AM

இலங்கைக்கும் சர்வதேச நாணயநிதியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்ட பின்னரே உதவிகள் குறித்து இந்தியா ஆராயும் - ஜெய்சங்கர்


இலங்கை நிலவரம் குறித்து இயல்பாகவே கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ள இந்தியா நிதியை விவேகமாக கையாள்வது பொறுப்புணர்வுள்ள அரசாங்கம் இலவசங்களை வழங்காமலிருப்பது போன்ற பாடங்களை இலங்கை நிலவரத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் காங்கிரஸ் உட்பட28 கட்சிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் இலங்கை போன்ற நிலவரம் இந்தியாவிலும் ஏற்படும் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நிராகரித்துள்ளார்.

பந்து தற்போது இலங்கையிடமே உள்ளது அவர்கள் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்,அவர்கள் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் அதன் பின்னர் எவ்வாறான ஆதரவை வழங்கலாம் என நாங்கள் ஆராய்வோம் என ஜெய்சங்கர் தெரிவி;த்துள்ளார்.

இலங்கை இன்னமும் பலவீனமான நிலையிலேயே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போன்ற நிலைமை இந்தியாவில் ஏற்படலாம் என நாங்கள் கருதவில்லை ஆனால் நாங்கள் செய்கின்ற விடயங்களில் அர்த்தமுள்ளது நிதியை விவேகமாக கையாள்வதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம்,ஒரிரு மாநிலங்களில் மாத்திரம் நாங்கள் இதனை சுட்டிக்காட்டவில்லை அனைத்து மாநிலங்களிலும் இதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம், என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: