News Just In

1/13/2026 05:06:00 PM

கண்ணாடிகளை அடித்து நொருக்கிச் சென்ற நபர்; துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த பொலிஸார்!


கண்ணாடிகளை அடித்து நொருக்கிச் சென்ற நபர்; துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த பொலிஸார்!




வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களின் கண்ணாடியை அடித்து நொருக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பத்தரமுல்லை - தியத உயனவிற்கு அருகில் உள்ள வீதியில் நேற்று(12) இடம்பெற்றது.வீதியில் வாகனங்கள் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் காரொன்றும் பயணித்துக் கொண்டிருந்தது.
அப்போது காரிற்கு பின்னார் மோட்டார்சைக்கிளில் நபர் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தார்.

மோட்டார்சைக்கிளில் சென்ற நபர் காரிற்கு அருகில் சென்று கையிலிருந்த கம்பியை எடுத்துக்கொண்டார்.

பின்னர் காரின் கண்ணாடியை அடித்து நொருக்கி மோட்டார்சைக்கிளில் ஆங்காங்கே ஓட்டிச்சென்றார்.இதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் குறித்த நபரை மடக்கிப்பிடிக்க முற்பட்ட போதும் பொலிஸாரிடம் சிக்கமால் தப்பித்துச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் காணொளி வைரலாகி வருகின்ற நிலையில் சந்தேக நபரான மோட்டார் சைக்கிள் செலுத்துனரை வெலிக்கடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பின்தொடர்ந்து சென்று குறுகிய நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரால் சுமார் 4 வாகனங்களுக்குச்சேதம்விளைவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கைது செய்யப்பட்டவர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபராவார் என்பதுடன், அவர் இன்று (13) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: