ஆசிரியர் சேவையில் இணைய காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
23ஆயிரத்து 344 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய அறிவுறுத்தல்களுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழு பரிந்துரை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, 23ஆயிரத்து 344 ஆசிரியர்களும் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரச சேவைக்கு 26,095 புதியவர்களை சேர்ப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அத்துடன் பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை 2026 ஆம் ஆண்டிலிருந்து, நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1/14/2026 08:14:00 AM
ஆசிரியர் சேவையில் இணைய காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: