பொத்துவில் 60ம் கட்டை கனகர் கிராம மக்களின் குடிநீர்ப்பிரச்சனைக்கு தீர்வு!
1990காலப்பகுதியில் நாட்டில் நிலவிய யுத்ததிலைகாரணமாக முற்றாக அழிக்கப்பட்டதே கனகர்கிராமம் .மக்களின் பல்வேறு வகையான போராட்டங்களின் பின்ஏறத்தாழ மூன்று தசாப்தங்களின் பின் கனகர் கிராமத்தின் ஒரு பகுதியில் குடியமர 73 குடும்பங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் அனுமதியளிக்கப்பட்டது.
மக்கள்குடியமரஅனுமதிக்கப்பட்டாலும்தூயகுடிநீர்இன்மை,காட்டுயானைகளின் அச்சுறுத்தல்,மக்களின் பொருளாதாரபிரச்சனை காரணமாக மிகமிக மந்த கதியிலே மக்கள் தற்காலிக கொட்டகைகளில் குடியேறினர்.இருப்பினும் இவர்கள்குடிநீரைப்பெற பல கிலோமீற்றர்அப்பால் உள்ள கிராமங்களுக்கேசெல்லவேண்டியிருந்தது.
மேற்படி கிராம மக்களின் குடிநீர்ப்பிரச்சனையை தீர்க்கும் முகமாக குமுகாய மேம்பாட்டுக் கழகம் -கிழக்கு(SAFE) இன் முயற்சியால் திட்ட மிடப்பட்ட3மில்லியன் ரூபா செலவிலானகுழாய் கிணற்றுடன் நீர்த்தாங்கி அமைக்கும் பணியினை தனிநபர்களுடன் , மக்கள் நலன் காப்பகம் -அவுஸ்திரேலிய அமைப்பும் மேற்கொண்டது.இத்திட்டம் இன்று நிறைவு பெற்று கிராம மக்களிடம்கையளிக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது .
கனகர் கிராம மக்கள் அமைப்பின் தலைவர் தலைமையில் நடைபெற்றஇந்நிகழ்வில் குமுகாய மேம்பாட்டு மன்றம்-கிழக்கு(SAFE) அமைப்பின்தலைவர் சி.தேவசிங்கன் ,SAFE அமைப்பின் அங்கத்தவர்கள்,மக்கள் நலன் காப்பகம் -அவுஸ்திரேலிய அமைப்பின் சிட்னி இணைப்பாளரும்மட்டக்களப்பு EDS அமைப்பின் பழைய மாணவரும்மான பேரின்பம் முகுந்தனுடன் ,மக்கள் நலன் காப்பகம் -அவுஸ்திரேலிய அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் இரத்தினம் விஜயானந்தன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் தேசிய இளைஞர் அணியின்தலைவருமானகிருஷ்னபிள்ளைசேயோன்மற்றும்கனகர்கிராமமக்களும்கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில்மக்களுக்கானகுடிநீர்வினயோகத்தைபேரின்பம்முகுந்தன் ஆரம்பித்து வைத்தார்.
No comments: