News Just In

1/25/2022 09:09:00 PM

2022 இல் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன!

2022 இல் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச வகுப்புக்கள் மட்டக்களப்பு - கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (EDS) ஏற்பாட்டில் எதிர்வரும் 05.02.2022 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வார இறுதி தினங்களில் மாலை வேளையில் முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இவ்வகுப்புகளுக்கான நிதியினை கனடாவில் உயர் கல்வியுடனான வசதி வாய்ப்பு மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கிக்கொண்டிருக்கும் Higher Education Consultant Services (Pvt) Ltd நிறுவனமானது வழங்குகின்றது.

இவ்வகுப்புகளில் பங்குகொள்ள விரும்பும் மாணவர்களின் பெயர் விபரங்களை எதிர்வரும் 29.01.2022ம் திகதிக்கு முன்னர் கீழ்குறிப்பிடப்படும் முகவரிக்கு வருகை தந்து பதிவு செய்துகொள்ளுமாறும் குறிப்பிட்ட எண்ணிக்கையான மாணவர்கள் மாத்திரமே இவ்வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முகவரி :    கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS)
                    இல. 300, புதிய கல்முனை வீதி,
                    நொச்சிமுனை, மட்டக்களப்பு

தொடர்புகளுக்கு: 077-4134782

No comments: