News Just In

9/29/2026 04:12:00 PM

கொடையாளர் ஒருவரினால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு நடமாடும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரம் வழங்கி வைப்பு

 கொடையாளர் ஒருவரினால் வாழைச்சேனை  ஆதார வைத்தியசாலைக்கு நடமாடும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரம் வழங்கி வைப்பு



வாழைச்சேனை ஆதார  வைத்தியசாலைக்கு லண்டனில் வதியும்  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சதாசிவம் மகேஸ்வரன் அவர்களால் 35,000 ஸ்டைலிங் பவுன் பெறுமதியான நடமாடும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது

 இந்த நடமாடும் இயந்திரம் மூலம் தூர இடங்களில் போக்குவரத்து  வசதியினம் காரணமாக சிரமப்படும் கர்ப்பிணி  தாய்மார்கள் அவர்கள் இடத்திலிருந்த  வாறே   பயனடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது . லண்டன் அபயம் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஊடாக சதாசிவம் மங்களேஸ்வரன் அவர்கள் இந்த இயந்திரம்  வழங்கப்பட்டது   . இது மட்டுமின்றி வட க்கு, கிழக்கு பகுதிகளில் விளம்பரம் இல்லாமல் பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்பவர் திரு மங்கலீஸ்வரன். (GATE  )  கேட் பவுண்டேஷன் நிறுவனம் ,அபயம் பவுண்டேஷன் நிறுவனம்  என்பவற்றின் ஊடாகவும்  தனிப்பட்ட முறையிலும்  கல்வி ,சுகாதாரம், தொழில் முயற்சி ஊக்குவிப்பு என்பவற்றில் அதீத கவனம் செலுத்துபவர் இவர். இவ்  வருட முற்பகுதியில் பொத்துவில் அறுபதாம் கட்டை கனகர்  கிராமத்தில் ஆறு நிரந்தர வீடுகளை 12 மில்லியன் ரூபாசெலவில்  அமைத்து  குமுகாய மேம்பாட்டு மன்றம்- கிழக்கு (SAFE ) அமைப்பின் ஊடாக   வழங்கி இருந்தார்


அல்ட்ரா சவுண்ட்ஸ்கேனிங் இயந்திரம் வழங்கியமையை முன்னிட்டு  இவரை கௌரவிக்கும் முகமாக வாழச்சேனை ஆதார வைத்தியசாலை சமூகம் ஞாபகார்த்த சின்னங்களை வழங்கி வைத்தது இவர் சார்பாக இவரின் பிரதிநிதி இதனை பெற்றுக் கொண்டார்

No comments: